top of page

கீ ரீன் டீ

  • YOGI.L.L.S.MANIKGHANTAN MA ( Yoga ) RMP ( AM )
  • Jun 28, 2016
  • 1 min read

தேயிலையின் இளங்குருத்து இலைகளின் இயல்பான சத்துக்கள் சிதையாமல் மிக உயர்வான வகையில் தயாரிக்கப்படும் கிரீன் டீயின் பயன்களைக் காண்போம்.

கிரீன் டீயின் பயன்கள்

உடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுதுவதன் மூலம் வசீகரத் தோற்றத்தை அளிக்கிறது. கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப்படுத்த செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனை குறைக்கிறது.

தோலில் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமையடைவதை தடுப்பதில் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நோய்களையும், வயோதிக தன்மையையும் ஏற்படுத்தும் அணுக்களுக்கு எதிராக செயல்படும் மூலப்பொருட்களான கேக்டிக்கைன்ஸ் அதிக அளவு கிரீன் டீ யில் காணப்படுகிறது.

கிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு, முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதா கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறது.

கிரீன் டீ ஈறுகளை பலவீனமாக்கும் பாக்டீரியாக்களை அழித்து பற்களை பலப்படுத்துவது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பற்கள் விழுவதற்கு காரணமாக இருக்கும் ப்ரீடெண்டல் நோயையும், கிரீன் டீ குடிப்பதன் மூலம் தடுக்க முடியும். கிரீன் டீ யில் உள்ள ஃப்ளூரைடு பற்சிதைவு, பற்குழிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. வாயில் உற்பத்தியாகக்கூடிய பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுப்பதன் மூலம், பல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் வாய் துர்நாற்றம் போன்றவற்றைத் தவிர்க்கிறது.

கிரீன் டீயிலுள்ள பாலிபினால்கள் டியூமர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை அழிக்கிறது. அவற்றின் DNA உருவாக்கத்தை தடுப்பதோடு நல்ல திசுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கேன்சர் திசுக்களை அழிக்கின்றது. கிரீன் டீ பாலிபினால்கள் அமிலோஸ், சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து, ஸ்டார்ச்சை மெதுவாக சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. அத்துடன் இது இன்சுலினின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.

கிரீன் டீயில் உள்ள கேட்டிக்கைன்ஸ் வயிற்றில் இருந்து குடல் வழியாக பயணித்து லென்ஸ், ரெட்டினா மற்றும் கண்களில் உள்ள திசுக்களை அடைகிறது. இதனால் கண்களின் திசுக்கள் பலப்பட்டு , க்ளுக்கோமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. கேக்டிக்கைன்ஸில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது. இதனால் கிரீன் டீ கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி, சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

எலும்புகளை பலப்படுத்துகிறது. ஆர்த்ரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும் காக்கிறது. மூட்டுகளை பலப்படுத்துவதிலும் கிரீன் டீ யின் பங்கு உண்டு.

இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து LDL, டிரைகிளிசரைடுகளின் அளவைக் கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பு எனப்படும் HDL-லின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதயத்தை பலப்படுத்துகிறது.

நன்றி: க்ரந்தாலயம்


 
 
 

Comments


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
  • YouTube Social  Icon
  • Facebook Social Icon
  • Google+ Social Icon
  • Twitter Social Icon

©  sri gnana sai indusries. எல்லாம்  கைகூடும்.

bottom of page